இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும். இதற்கு பதில் ஒரே கிளிக்கில் கூகுளின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.
இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
உபயோகிக்கும் முறை: இந்த Terminal for Google நீட்சியை தரவிறக்கம் செய்து குரோம் உலாவியில் நிறுவிய பிறகு குரோமில் தோன்றும் அந்த ஐகானை கிளிக் செய்தால் கூகுள் சேவைகள் வரும்.
தோன்றும் சேவைகளில் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Options Page என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் Services என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை கிளிக் செய்தால் வரும், Disabled Services என்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம்.
இனி அனைத்து சேவைகளின் URL ஞாபகம் வைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கிளிக்கில் எந்த சேவைக்கும் சுலபமாக செல்லலாம்.
No comments:
Post a Comment